பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - September 2023
ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன் சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி
"ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்"
ஏதேனும் ஒன்று உருவாக மற்றொன்று காரணமாக அமைகிறது உலகில் உயிர்கள் உண்டாவதற்கு சூரியன் ஒரு காரணம், கடலில் அலைகள் உருவாக சந்திரன் ஒரு காரணம்!இப்படி ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பது போல வலிமையற்று போனவர்கள் மீண்டெழுவதற்கு ஒரு காரணமாக இயற்கையும், காலமும் அமைந்திருக்கும். அப்படி வரலாற்றில் பல நூறு வருடங்கள் அடங்கி ஒடுங்கிப்போயிருந்த பாண்டியர்கள் மீண்டும் தன்னெழுச்சி பெற்று தங்களுக்கான அங்கீகாரத்தையும், வலிமையையும் பெற்று பிற்கால பாண்டிய பேரரசு உருவாவதற்கு முதன்மை காரணமாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியர் எப்படி மூன்றாம் குலோத்துங்க சோழரால் உருவானான்? அவர் சோழ நாட்டின் மீது சினதெழுந்து, வீரவஞ்சினம் ஏற்று சோழ நாட்டை அழிக்க காரணம் என்ன? பிற்கால சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டிய பேரரசின் தொடக்கத்திற்கும் வித்திட்ட மூன்றாம் குலோத்துங்க சோழர் பற்றியும் மாறவர்மன், சுந்தரபாண்டியர் பற்றியும் மிகுந்த வரலாறுகளோடு, கற்பனை கதாபாத்திரமே இல்லாது சிறு புனைவு கலந்து உருவான கதையே சோணாடு கொண்டான் மணிமுடி
நீங்கள் இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால், புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும். வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: 73970 19916
Comments