கள்வனின் காதலி கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் கல்கி பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். இது ஒரு சமூக நூலாகும்.
கல்கியின் ‘அமர வாழ்வு‘ – அமர வாழ்வு, அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவல் வரிசைகளில் ஒன்று. இக்கதை இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக நடப்பது போல எழுத பட்ட கதை. கதையின் நாயகன் ராகவன், தன் தந்தையை போலவே ஒரு மருத்துவராக பணியை துவங்கியவர். அதே மருத்துவமனையில் ரேவதி என்னும் பெண் மருத்துவரை விரும்பி திருமணம் புரிந்து கொண்டு தலைமை மருத்துவரான குமரப்பவிடமிருந்தும் அவர் சூழ்ச்சியில் இருந்தும் தப்பித்து மலேஷியாவில் குடியெருகிறார்கள். அங்கு அவர்கள் பல போராட்டங்களை சந்திக்கிறார்கள், இறுதியாக நேதாஜி சுபாஷ் ச்ந்திரபோஸ் தலைமையிலான விடுதலை போராட்ட குழுவில் இணைகிறார்கள். அதன் பிறகு என்ன நேர்கிறது என்பதே கதை. இராகவன்,கர்னல் குமரப்பா, ரேவதியின் கதா பாத்திரங்கள் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருந்தது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு குறுங்கதை.
Comments