அருள் பெற்ற நாயன்மார்கள்: 63 நாயன்மார்கள் வரலாறு
ஆசிரியர்: நாகர்கோவில் கிருஷ்ணன்
வகை: இலக்கியம், வரலாறு
பதிப்பகத்தார்: நர்மதா பதிப்பகம்
மொழி: தமிழ்
அருள் பெற்ற நாயன்மார்கள், 63 நாயன்மார்கள் வரலாறு, Arul Petra Naayanmargal, 63 Naayanmargal Varalaru, நாகர்கோவில் கிருஷ்ணன், Nagerkovil Krishnan Books, இலக்கியம், வரலாறு, Ilakkiyam, Varalaru, நர்மதா பதிப்பகம், Narmadha Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
அருள் பெற்ற நாயன்மார்கள்: 63 நாயன்மார்கள் வரலாறு செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக. 63 நாயன்மார்கள் 1. அதிபத்தர் நாயனார் | 2. அப்பூதியடிகள் | 3. அமர்நீதி நாயனார் | 4. அரிவாட்டாய நாயனார் | 5. ஆனாய நாயனார் | 6. இசைஞானியார் | 7. இடங்கழி நாயனார் | 8. இயற்பகை நாயனார் | 9. இளையான்குடிமாறார் | 10. உருத்திர பசுபதி நாயனார் | 11. எறிபத்த நாயனார் | 12. ஏனாதிநாத நாயனார் | 13. ஐயடிகள் காடவர்கோன் | 14. கண்ணப்பர் நாயனார் | 15. கணநாதர் நாயனார் | 16. கணம்புல்லர் நாயனார் | 17. கலிக்கம்பர் நாயனார் | 18. கலிக்காம நாயனார் | 19. கலிய நாயனார் | 20. கழற்சிங்கர் நாயனார் | 21. காரி நாயனார் | 22. காரைக்கால் நாயனார் | 23. குங்கிலியகலையனார் | 24. குலச்சிறையார் நாயனார் | 25. கூற்றுவர் நாயனார் | 26. கோச்செங்கட் சோழன் நாயனார் | 27. கோட்புலி நாயனார் | 28. சடைய நாயனார் | 29. சண்டேஸ்வர நாயனார் | 30.சக்தி நாயனார் | 31. சாக்கியர் நாயனார் | 32. சிறப்புலி நாயனார் | 33. சிறுதொண்டர் | 34. சுந்தரமூர்த்தி நாயனார் | 35. செருத்துணை நாயனார் | 36. சேரமான் பெருமாள் நாயனார் | 37. சோமசிமாறர் நாயனார் | 38. தண்டியடிகளர் நாயனார் | 39. தருக்குறிப்புத் தொண்டர் | 40. திருஞானசம்பந்தமூர்த்தி | 41. திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் | 42. திருநீலகண்டர் | 43. திருநீலநக்க நாயனார் | 44. திருநாளைபோவார் நாயனார் | 45. திருநாவுக்கரசர் நாயனார் | 46. திருமூலர் நாயனார் | 47. நமிநந்தியடிகள் நாயனார் | 48. நரசிங்க முனையர் நாயனார் | 49. நின்றசீர் நெடுமாறன் நாயனார் | 50. நேச நாயனார் | 51. புகழ்சோழன் நாயனார் | 52. புகழ்த்துணை நாயனார் | 53. பூசலார் நாயனார் | 54. பெருமிழலைக்குறும்பர் நாயனார் | 55. மங்கையர்க்கரசியார் நாயனார் | 56. மானக்கஞ்சாற நாயனார் | 57. முனையடுவார் நாயனார் | 58. முருக நாயனார் | 59. மூர்க்க நாயனார் | 60. மூர்த்தி நாயனார் | 61. மெய்ப்பொருள் நாயனார் | 62. வாயிலார் நாயனார் | 63. விறன்மிண்ட நாயனார் நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம். திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பியின் மூலமாக, இராசராசசோழன் தேவாரத் திருமுறைகள் தில்லைப் பொன்னம்பலத்தின் அருகே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்தான். தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி, தேவார ஆசிரியர் மூவர் திரு உருவங்களுக்கும் வழிபாடு செய்து தில்லைத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்து, பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்த போது பெரும்பாலான ஏடுகள் செல்லரித்துக் கிடந்ததை கண்டு மனம் வருந்தினான் மன்னன். “இக்காலத்துக்கு வேண்டிய தேவாரப் பதிகங்களைத் தவிர மற்றவற்றை செல்லரிக்கச் செய்தோம்” என்ற அருள் வாக்கினால் மனம் தேறிய மன்னன், நம்பியாண்டார் நம்பியிடம் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை தொகுத்து தருமாறு வேண்டினான். நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும், மாணிக்க வாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எனும் இரு நூல்களை எட்டாம் திருமுறையாகவும் தொகுத்தார். திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் 28 மற்றும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பதிகம் ஆகிய 29 பதிகங்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரப் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும் தொகுத்தார். திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்களையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய 89 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 1400 பதிகங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்துக் கொடுத்தார். பின்னர் சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாக ஏற்கப்பட்டது.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்