top of page
இந்தியாவின் இருண்டகாலம்

இந்தியாவின் இருண்டகாலம்

SKU: PBH837
₹500.00 Regular Price
₹465.00Sale Price

ஆசிரியர்: சசி தரூர்  

தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்  

வகை: மொழிபெயர்ப்புகள், வரலாறு  

பதிப்பகத்தார்: கிழக்கு பதிப்பகம்  

மொழி: தமிழ்   

 

Indiavin Irundakalam, இந்தியாவின் இருண்டகாலம், Kalachuvadu, சசி தரூர், Sasi Tharur, கிழக்கு பதிப்பகம், Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books Online, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.

    சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங்களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது.

    தவிரவும் காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது. பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதாக் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார்.

    பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம். நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது.

    ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்ந வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் நூலிக் An Era of Darkness அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.

    ***

    சசி தரூர்

    திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர். ஐ.நாவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சில நாவல்கள் எழுதியுள்ளார். இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த ஒரு பேச்சாளரும்கூட.

    ***

    ஜே,கே. இராஜசேகரன் (மொழிபெயர்ப்பாளர்)

    தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதன் வணிகப் பகுதியான தி எகனாமிக் டைம்ஸின் பொறுப்பாசிரியர். இது அவருடைய ஏழாவது மொழிபெயர்ப்பு நூல். முன்னதாக ஷேக்ஸ்பியரின் மெக்பெத் பயங்கரவாதம் நேற்று இன்று நாளை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page