top of page
பல்லவர் வரலாறு, Pallavar Varalaaru Front Cover, Manner Mannan, இரா. மன்னர் மன்னன், பயிற்று படைப்பகம்

பல்லவர் வரலாறு - பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? Pallavar Varalaaru

SKU: PBH1552
₹250.00 Regular Price
₹237.50Sale Price

ஆசிரியர்: இரா. மன்னர் மன்னன்     

வகை: கட்டுரைகள், வரலாறு, தமிழ்நாடு     

பதிப்பகத்தார்: பயிற்று பதிப்பகம்     

பக்கங்கள்: 208          

மொழி: தமிழ்    

 

பல்லவர் வரலாறு - பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்?, Pallavar Varalaaru, இரா. மன்னர் மன்னன், R. Mannar Mannan, கட்டுரைகள், வரலாறு, தமிழ்நாடு, Katturaigal, Varalaru, Tamil Nadu, பயிற்று பதிப்பகம், Payitru Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்... பல்லவப் பேரரசை தரிசிப்போம்!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page