கொம்மை
ஆசிரியர்: பூமணி
வகை: நாவல்
பதிப்பகத்தார்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
Kommai, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்துவரும் தேவதை கங்காதேவி. யமுனையில் படகோட்டிச் சேவைசெய்த மச்சர் குலப் பெண் சத்தியவதி.ஆணாதிக்கத்தால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவள் அம்பை.தன்னை செயற்கைக் குருடாக்கிக்கொண்டு இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைப்பிடித்தவள் காந்தாரி.இளம்பருவத்தில் முனிவனுக்கு அந்தரங்கத் தொண்டு செய்தது முதல் குருதேசத்தின் ராணியாக உயர்ந்தது வரை சகல அவலங்களுக்கிடையிலும் வைராக்கியமாக வாழ்ந்துமுடித்தவள் குந்தி. விலைக்கு வாங்கப்பட்ட சூதர் குலப் பெண் மாதுரி.இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ அபலைகள்.மகாபாரதத்தில் சூத்திரதாரியாக இயங்கும் கிருஷ்ணனை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அவனது தீம்புகள் எனக்கு ரெம்ப ரெம்ப ருசிக்கும்.
மனிதனாக அவதரித்த கிருஷ்ணன் எனக்குச் சேக்காளி. உற்ற நண்பன். விளையாட்டுத் தோழன். அன்பான அண்ணன் வழிகாட்டி இன்னும் என்னென்னமோ...கிருஷ்ணனுடன் ஆடு, மாடு மேய்த்தேன். ஆற்று மணலில் ஆடிப் பாடினேன். ஆலமரத்தடியில் கிட்டிக்குச்சு விளையாடினேன். ஆயர்பாடியில் வெண்ணெய் திருடினேன். பச்சைக் குதிரை சுமந்தேன். பூவரச இலையில் புல்லாங்குழல் செய்து ஊதினேன். வில்லம்பினால் விலங்குகளை வேட்டையாடி வேகவைத்து உண்டு பசியாறினேன்.
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.